Saturday 20 October 2012

ரயில்வேயும் தவ்ஹித்ஜமாத்தும் பரபரப்பான முத்துப்பேட்டை

   முத்துப்பேட்டையில் அகலரயில்பாதை பனிகள்ஆரம்பிக்க அறிகுறியாக மீட்டர்கேஜ் ரயில்கள் 18.10/2012 அன்றோடு நிறுத்தப்பட்டது .ஒரு வழியாக பிராட்கேஜ்[அகலரயில்பாதை] வரப்போகிரது என சந்தோஷப்பட்ட நேரத்தில்  அதிரடியாக ஒரு செய்தி வெளியானது
   முத்துப்பேட்டையில் உள்ள கம்பியூட்டர் முன்பதிவு மையத்தையும் எடுக்கப்போவதாக செய்திகிடைத்தது உடனே களத்தில் இறங்கிய தவ்ஹித்ஜமாத் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு இதை எடுக்ககூடாது என கோரிக்கைவைத்தது அதோடு தொகுதி எம் பி மற்றும் எம் எல் ஏ வை தொடர்புகொண்டு ஆவன செய்யுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது
  மக்கள் சக்திக்குதான் அதிகாரவர்க்கம் பயப்படும் என்பதால் இதற்க்கு சரியான தீர்வு இல்லாவிட்டால் வீரியமான போராட்டத்தை எதிகொள்ளவேண்டி இருக்கும் என்பதை உனர்த்தும் விதமாக லித்தோஸ் போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது
  உடனே கிளை நிர்வாக குழு கூடி சம்மந்தப்பட்ட அதிகாரியை நேரில் சந்திப்பது என முடிவு செய்து ஒரு குழு நியமித்து உடனடியாக அந்த குழு திருச்சி புறப்பட்டு சென்றுள்ளது அதன் விபரம் இன்ஸா அல்லாஹ் நாளை வெளியிடப்படும்